புதிய அமைச்சரவையில் ஐ.தே.க. யின் சகல அமைச்சர்களும் இன்று சத்தியப்பிரமாணம்

1636 0

புதிய அமைச்சரவைக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (01) காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

சத்தியப்பிரமாணம் செய்யப்படும் அமைச்சர்களுக்கு அது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும்கூறப்பட்டுள்ளது.

தற்பொழுது அமைச்சுப் பதவிகளை மேற்கொள்ளும் அமைச்சர்களின் பதவியிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. ஐ.தே.க.யில் அமைச்சுப் பதவிகளை வகிக்கும் அனைவரும் தற்பொழுது சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

புதிதாக பல பிரதி அமைச்சர்களும் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Leave a comment