சிவப்பு அறிவித்தலை விலக்கிக்கொள்ளுமாறு இண்டர்போலிடம் கோரிக்கை

1432 0

தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள இண்டர்போல் சிவப்பு அறிவித்தலை விலக்கிக்கொள்ளுமாறு ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச பொலிஸ் துறையான இன்டர்போலிடம் கடிதம் மூலம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மிக் 27ரக விமான கொள்வனவின் போது நிதிமோசடி தொடர்பில் உதயங்க வீரதுங்க டுபாயில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எனினும் அவரை இலங்கைக்கு நாடு கடத்துவதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலையில், தமக்கு எதிரான சர்வதேச சிவப்பு அறிவித்தலை விலக்கிக்கொள்ளுமாறு உதயங்க வீரதுங்க, கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a comment