ஹெரோயினுடன் 11 இளைஞர்கள் கைது

352 0

1090411515untitled-1கம்பஹா வெலிவேறிய பிரதேசத்தில் 11 இளைஞர்கள் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

இவர்கள் வசம் காணப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 3 இலட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் வெலிவேரிய மற்றும் கொழும்பு பிரதேசங்களை சேர்ந்த 20 மற்றும் 30 வயதுடைய இளைஞர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 9 பேர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், ஏனைய இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக வெலிவேறிய காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.