ரணில் – மைத்திரி திருமணம் நிரந்தரமானது – அமைச்சர் சஜித்

444 0

maithripala-ranil-sajithபிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் இடம்பெற்றுள்ள அரசியல் திருமணமானது நிரந்தரமானது என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது நாம் கூட்டு எதிர்கட்சியினருக்கு தரும் தகவல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மற்றுமொரு திருமணத்தை நடாத்த கூட்டு எதிர்கட்சியினருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியினை இலங்கையின் முதல்தர கட்சியாக பெயர் பெற தான் என்றும் ஆதரவு நல்குவதாகவும் அமைச்சர் சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் ஐக்கிய தேசிய கட்சியானது அனைத்து பிரச்சினைகளையும் எதிர்காலத்தில் தீர்த்து வைப்பதாக, அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.