சிலாபம் – கொழும்பு பிரதான வீதியிலுள்ள காக்கப்பள்ளி, சேமாஇருப்பு பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலத்தைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலொன்றையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலத்தின் உடலில் பல்வேறு காயங்களும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் 53 வயதுக்கும் 55 வயதுக்கும் இடைப்பட்ட ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது. சடலம் இருந்த இடத்துக்கு அருகில் வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்ததற்கான அடையாளம் காணப்படுவதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

