இது போன்ற எதிர்க் கட்சித் தலைவர் உலகில் எங்கும் இல்லை- தினேஷ்

301 0

பாராளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைமைப் பதவியை பொறுப்பேற்க தான் தயார் என கூட்டு எதிர்க் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன இன்று (27) அறிவித்துள்ளார்.

எதிர்க் கட்சிக்குரிய அதிகமான உறுப்பினர்களை கூட்டு எதிர்க் கட்சி கொண்டிருக்கும் போது அப்பதவி கூட்டு எதிர்க் கட்சிக்கே உரியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய உத்தியோகபுர்வ எதிர்க் கட்சியை விட தமக்கு உறுப்பினர்கள் அதிகமாகவுள்ளனர். எதிர்க் கட்சித் தலைவர் தவறான முறையில் தெரிவு செய்யப்பட்டார். இந்த உண்மையை விளங்கிக் கொண்டு எதிர்க் கட்சித் தலைவர் பதவி விலகுவாராயின் அது சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய எதிர்க் கட்சித் தலைவர் மக்களின் கவலையை வாய்திறந்து பேசுவதில்லை. அவர் எப்பொழுதும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றார். இவ்வாறான எதிர்க் கட்சித் தலைவர் ஒருவரை உலகில் எங்கும் காண முடியாது எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

Leave a comment