ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டில் கல்கிஸ்ஸ பகுதியில் வைத்து குறிப்பிட்ட நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
5 கிராம் 700 மில்லி கிராம் ஹெராயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டிருந்தார்.
ஆயுள் தண்டனை விதிக்க நபர் கல்கிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஒருவர் எனவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

