சரணடைந்த ஹொரண இறப்பர் தொழிற்சாலையின் உரிமையாளர், தொழிற்சாலையின் முகாமையாளர் மற்றும் ஆய்வுகூட உதவியாளர் ஆகியோருக்கு மே 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஹொரண நீதவான் நீதிமன்றில் இன்று (27) இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஹொரண, பெல்லப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையின் அமோனியா அமிலம் அடங்கிய குழியை சுத்தம் செய்வதற்காக சென்ற ஊழியர் ஒருவர் உட்பட ஐந்து பேர் கடந்த 19 ஆம் திகதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது

