போதைப்பொருள் ஒன்று இலங்கையில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பிலெக் மென்டி எனப்படும் இந்த போதை பொருளுடன் வெளிநாட்டவர் உள்ளிட்ட மூன்று பேர், சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.பிலெக் மென்டி போதைப்பொருள் இலங்கையில் கண்டுபிடித்த முதல் சந்தர்ப்பம் இதுவாக கருதப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர் அவுதிரேலியாவை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.அவரிடம் இருந்து 82 கிராம் பிலெக் மென்டி போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் பெறுமதி 12 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய நாட்டவர் இந்த போதைப்பொருளை தனது உள்ளாடையில் மறைத்து கொண்டு வந்துள்ளதாக, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்ட இலங்கையரிடம் இருந்து 240 கிராம் ஹஷிஸ் போதைப்பொருள் கண்டுபிடித்துள்ளதாக சுங்க திணைக்களம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

