சீதா எலிய சீதை அம்மன் ஆலயத்தில், வெள்ளிப் பாதம் இன்று பிரதிஸ்டை(காணொளி)

446 0

நுவரெலியா சீதா எலிய சீதை அம்மன் ஆலயத்தில், வெள்ளிப் பாதம் இன்று பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது.

நுவரெலியா சீதா எலியவிலுள்ள சீதை அம்மன் ஆலயத்தில், இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட சீதை அம்மன் வெள்ளிப் பாதம் இன்று பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது.

இலங்கை இந்திய வரலாற்றுடன் தொடர்புபட்ட நுவரெலியா சீதாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தில், இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட தூய வெள்ளியில் அமைக்கப்பட்ட சீதா பாதம்  பூஜைகளுடன் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது.

இந்தியா பாண்டிச்சேரியை சேர்ந்த சமூக சேவகரும், ஆன்மீகவாதியுமான என்.பாலகிருஸ்ணன் குடும்பத்தினரால் சீதா வெள்ளிபாதம், சீதை அம்மன் ஆலயத்திற்கு நன்கொடை செய்யப்பட்டுள்ளது.

சீதா பாதம் ஆலயத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்ட இன்றைய நிகழ்வில்,

108 சங்காபிN~கம் நடைபெற்று இராமபிரனுக்கும் சீதையம்மனுக்கும் பூஜைகளும் நடைபெற்றதைத் வெள்ளியாலான சீதா பாதம் பிரதிஸ்டை செய்யப்பட்டது.

இவ்விசேட வழிபாட்டில், ஆலய பரிபாலன சபையின் தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் பங்கேற்றதுடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டனர்.

 

 

Leave a comment