ரோக்கியோ சுப்பர் சீமெந்து நிறுவனத்தினால் வீடற்ற மக்களுக்கு வீடுகள் (காணொளி)

10534 0

யாழ்ப்பாணத்தில் ரோக்கியோ சுப்பர் சீமெந்து நிறுவனத்தினால் வீடற்ற மக்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.

யாழ்ப்பாணத்தில் காணிகள் வீடுகள் அற்ற மக்களுக்கு ரோக்கியோ சுப்பர் சீமெந்து நிறுவனம் வீடுகள் அமைத்துக் கொடுக்கவுள்ளது.

இதற்காக இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய 25 குடும்பங்கள் அரசாங்க அதிபரின் சிபார்சின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான வீடுகள் ரோக்கியோ நிறுவனத்தினால் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.

காணி மற்றும் வீடுகள் அற்ற 25 குடும்பங்களுக்கு வீடமைத்துக் கொடுப்பதற்காக, ரோக்கிய நிறுவனத்தினால் உரும்பிராய் பகுதியில் 32 பரப்பு காணி 60 இலட்சம் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த காணியில், தெரிவு செய்யப்படும் வீடற்ற மக்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.

நிர்மாணிக்கப்படவுள்ள வீடொன்றின் பெறுமதி 1.8 மில்லியன் ரூபா என்றும், இதற்கான அத்திவாரம் இடும் நடவடிக்கை அடுத்த மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைக்கப்படும் வீடுகள் 9 மாதத்திற்குள் நிர்மாணிக்கப்பட்டு உரியவர்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

 

Leave a comment