வெசக் மற்றும் பொசன் தினங்களில் தானசாலைகளை நடத்துவதற்கு நிபந்தனைகள்

336 0

எதிர்வரும் வெசக் மற்றும் பொசன் தினங்களில் தானசாலைகளை நடத்துபவர்கள் பின்பற்ற வேண்டிய 6 ஒழுங்குமுறைகளை பௌத்த நடவடிக்கைகள் ஆணையாளரால் வெளியிடப்பட்டுள்ளது.

வெவ்வேறு நிறுவனங்கள், தனிநபர்களால் தானசாலைகள் நடத்தப்படும் போர்வையில், நிதி ​சேகரிப்பு வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும், அவ்வாறு பெறப்படும் நிதி எவ்விதத்திலும் செலவு செய்யப்படுவது இல்லையென்றும்,அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தானசாலைகளை நடத்துபவர்கள் குறித்த பிரதேசத்திலுள்ள விகாரையின் விகாராதிபதி மற்றும் கிராம உத்தியோகத்தரின் அறிவுரைகளுக்கு அமைய தானசாலைகளை நடத்துமாறும், தானசாலைகளுக்காக நிதி சேகரிக்கப்படும் போது, குறித்த அதிகாரிகளின் சிபாரிசுகளை பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொதுமக்களை சிரமத்துக்கு உள்ளாகும் வகையில் தானசாலைகளை நடத்துவது, அமைதியான இசையை ஒலிபரப்புதல், சுகாதார முறைபடி உணவுகளைத் தயாரித்தல், தானசாலைக​ளுக்கு பௌத்த கொடியை பயன்படுத்தாமல் மஞ்சள் நிறக் கொடியைப் பயன்படுத்துதல், மதுபானம், போதைப்பொருள், சிகரெட் போன்றவற்றை தவிர்த்து விட்டு புனிதத் தன்மையுடனும், கட்டுபாட்டுடனும் தானசாலைகளை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பானது சகல மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக நிமல் கொட்டவலகெதர மேலும் தெரிவித்துள்ளார்

Leave a comment