ஜனாதிபதி – பிரதமர் சந்திப்பு ; ஐ.தே.க பிரதி செயலாளர் கருத்து

338 0

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று நடைபெறுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி செயலாளர் அகிலாவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி சார்பில் அமைச்சரவை மாற்றம் அண்மையில் நடைபெற்றதால், சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர் ஐக்கிய தேசிய கட்சி சார்பான அமைச்சரவையில் மாற்றம் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், அது தொடர்பிலும் கட்சி சார்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இன்று காலை கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Leave a comment