படித்த பாடத்தை வைத்து சிறந்த பயணத்தை முன்னெடுப்போம்- ராஜித

264 0

அரசாங்கத்திலுள்ள சகலரும் கடந்த கால அரசியல் நிகழ்வுகளினால் நன்றாக பாடம் படித்துள்ளதாகவும்,  இதனை அடிப்படையாக வைத்து எதிர்வரும் இரண்டு வருட காலப் பகுதியில் சிறந்த பயணமொன்றை செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பாணந்துரை பிரதேச சபையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் மீண்டும் அதிகாரத்துக்கு வரும் வாய்ப்பு தற்போதைய அரசாங்கத்துக்கு மாத்திரமே உள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment