பிங்கிரிய பிரதேசத்தில் புத்தாண்டில் சிற்றூண்டிச்சாலை ஒன்றில் பிரசித்தமாக பியர் விற்பனை செய்த நபரொருவரை குளியாப்பிட்டிய மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பிங்கிரிய – கஹலவத்த பிரசேத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 240 பியர் டின்கள் மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட பியர் தொகையையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

