கொழும்பு மாநகரில் நிலத்தடி சுரங்க வீதியை அமைக்க 800 மில்லியன் டொலரை செலவிடும் சீனா!

12 0

1.4 பில்லியன் டொலர் செலவில் அமைக்கப்படும் கொழும்பு துறைமுக நகரை, கொழும்புடன் இணைக்கும் நிலத்தடி சுரங்க வீதி வலையமைப்பில் 800 மில்லியன் டொலரை சீன நிறுவனம் ஒன்று முதலீடு செய்யவுள்ளது.

கடலுக்குள் சீன நிறுவனத்தினால் அமைக்கப்படும் கொழும்பு துறைமுக நகரை, பிரதான நகருடன் இணைக்கும் சுரங்க வீதி வலையமைப்புகள் அமைக்கப்படவுள்ளன.இந்த வீதி வலையமைப்பு திட்டத்தில் 800 மில்லியன் டொலரை முதலீடு செய்வதற்கு சீனாவின் தொடர்பாடல் கட்டுமான நிறுவனம் முன்வந்துள்ளது.

இந்த திட்டத்துக்கான உடன்பாடு ஏற்கனவே கையெழுத்திடப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிலம் தொடர்பான சட்ட நெறிமுறைகள் வகுக்கப்பட்ட பின்னர், கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்று பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

269 ஏக்கர் பரப்பளவில் துறைமுக நகருக்காக கடலுக்குள் நிலத்தை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 60 வீதத்துக்கும் அதிகமானளவு நிலப்பகுதி ஏற்கனவே உருவாக்கப்பட்டு விட்டது.இந்த ஆண்டுக்குள் நிலத்தை மீட்கும் பணிகள் முடிந்து விடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

சிறு கட்­சி­க­ளி­டம் மக்கள் சிறைக் கைதி­க­ளாக இருந்­து­வ­ரு­கின்­ற­னர்!

Posted by - December 18, 2017 0
பெரும் அர­சி­யல் கட்­சி­க­ளை­விட, சிறு­அ­ர­சி­யல் கட்­சி­கள் இனங்­க­ளை­யும், மதங்­க­ளை­யும் மையப்­ப­டுத்­தியே செயற்­பட்­டுக் கொள்­கின்­றன.

இந்திய மீனவர்கள் கைது

Posted by - October 12, 2017 0
இந்தியாவைச் சேர்ந்த மீனவர்கள் ஐந்து பேர், இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளையில் அவர்கள்…

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு சட்டத்தரணிகள் மேன்முறையீடு

Posted by - June 15, 2018 0
ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு மனுவொன்றை  ஞானசார தேரரின் சட்டத்தரணிகள் இன்று (15) தாக்கல் செய்துள்ளனர். காணாமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா…

குழப்பத்தை தவிர்க்கவே விளக்கம் கோரினேன் !

Posted by - January 11, 2018 0
எனது பதவிக்காலத்தில் உள்ள குழப்பத்தை தவிர்த்துக்கொள்ளும் நோக்குடனேயே உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்கட்சி முறைப்பாடு

Posted by - January 4, 2017 0
ஹம்பாந்தோட்டை – மாகம்புர துறைமுகத்தை சீன நிறுவனம் ஒன்றிடம் கையளிக்கும் போது அரச நிதியை முறைகேடான வகையில் பயன்படுத்தியதாக கூறி ஒன்றிணைந்த எதிர்கட்சி இன்று முறைப்பாடு ஒன்றை…

Leave a comment

Your email address will not be published.