பொலிஸார் விடுத்துள்ள விஷேட ​அறிவுறுத்தல்

9 0
தமக்கு தெரியாத இடங்களுக்கு நீராடச் செல்வதை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த நாட்களில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் நீராடச் சென்று உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

கடந்த வருடம் இவ்வாறான 727 மரணங்கள் பதிவாகியிருந்தன. இந்த வருடத்தின் முதல் இரண்டு மாத காலப்பகுதிக்குள் 93 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் கவனக் குறைவு காரணமாகவே உயிரிழந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் காலநிலை காரணமாக நீராடிக் கொண்டிருக்கும் போது ஒரேயடியாக பெரியளவில் நீர் வழிந்தோடி வரலாம். உயிர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உள்ள இடங்களில் மாத்திரம் நீராடுமாறு பொலிஸார் மக்களை கேட்டுள்ளனர்.

ஆபத்து எச்சரிக்கை தொடர்பில் பொருத்தப்பட்டுள்ள அறிவிப்புப் பலகைகளில் உள்ள ஆலேசனைகளை பின்பற்றுமாறும் மக்கள் கேட்கப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் 94 உயிர்களையும், இந்த வருடம் 25 பேரையும் இலங்கை பொலிஸாரின் உயிர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் காப்பாற்றியுள்ளனர்.

Related Post

மகாவலி கங்கையில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

Posted by - August 14, 2018 0
மகாவலி கங்கையில் மிதந்து வந்த சடலமொன்றை கட்டுகஸ்தோட்டை பொலீஸார் இன்று காலை மீட்டுள்ளனர்.கண்டி, பொல்கொல்லை பிரதேசத்தில் மகாவலி நீர்த்தேகத்தில் வடிந்தோடும் நீருடன் சேர்ந்துள்ள குப்பைகளுக்குள்  குறித்த சடலம்…

ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி நாளை கொழும்பில் பாரிய சத்தியாகிரகப் போராட்டம்!

Posted by - June 17, 2018 0
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி நாளை கொழும்பில் பாரிய சத்தியாகிரகப் போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

சபாநாயகர் மனோ ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளாரா? – எஸ்.பீ.

Posted by - November 16, 2018 0
சபாநாயகரின் நடத்தையைப் பார்க்கும்போது அவர் மனோரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் எழுவதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதியின் முடிவை சவாலுக்கு உட்படுத்த சபாநாயகருக்கு எந்த அதிகாரமும்…

மகிந்த புதல்வர்களின் பயணப் பொதியைக் காவிய தூதுவரை திருப்பி அழைக்க அழுத்தம்

Posted by - October 6, 2018 0
மகிந்த ராஜபக்சவின் இரண்டு புதல்வர்களையும், கட்டார் விமான நிலையத்தில் வரவேற்று அவர்களின், பயணப் பொதிகளை காவிச் சென்ற, கட்டார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் ஏஎஸ்பி லியனகேயை திருப்பி…

சரத் என்.சில்வாவை 7 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

Posted by - January 24, 2019 0
நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வாவை எதிர்வரும் 7 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சரத்…

Leave a comment

Your email address will not be published.