வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

5 0

திஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியின் அம்பலாந்தோட்டை மிரிஜ்ஜவல சந்தியில் முச்சக்கர வண்டி ஒன்றுடன் பஸ் வண்டி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வருமே உயிரிழந்துள்ளனர்.

ஹசலக பிரதேசத்தைச் சேர்ந்த, தந்தை, தாய், மற்றும் அவர்களது ஒரு வயது மற்றும் 8 வயது இரு பிள்ளைகள் ஆகியோரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் முச்சக்கரவண்டி முற்றாக சேதமடைந்துள்ளதோடு, பஸ்ஸுக்கும் சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பஸ் சாரதிக்கோ, பயணிகளுக்ககோ எவ்வித காயங்களும் ஏற்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பஸ்ஸின் சாரதி ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Related Post

ஆசிய அபிவிருத்தி வங்கி உதவியுடன் நன்னீர் மீன் உற்பத்தியை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டம்

Posted by - August 20, 2018 0
கலேவல தம்புள்ளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் நன்னீர் மீன் உற்பத்தியை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கி உதவியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த செயற்றிட்டத்திற்கு 150 மில்லியன்…

விமானப்படை பயிற்சி முகாமில் குண்டுவெடிப்பு ; 4 படையினர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - September 7, 2017 0
திருகோணமலை – மொரவெவயில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை பயிற்சி முகாமில் கைக்குண்டொன்று வெடித்துள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த வெடிப்பு சம்பவத்தில் 4 படையினர் காயமடைந்துள்ளதாக இராணுவ…

காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராய அரசாங்கம் தயார் – சிறிசேன

Posted by - May 20, 2017 0
காணாமல் போனவர்கள் தொடர்பில் தரவுகளுடன் தெரிவிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் தொடர்பில் ஆராய அரசாங்கம் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சம்பூர் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற…

வடக்கு மாகாணத்தின் அரச சேவைக்கான வயதெல்லை அதிகரிப்பு!

Posted by - September 14, 2016 0
வடக்கு மாகாணத்திலிருந்து அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படுபவர்களின் வயதெல்லை 35 இலிருந்து 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.ஆளுநர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற…

காட்டுக்குலிருந்து குடும்பஸ்தரொருவரின் சடலம் மீட்பு

Posted by - March 21, 2019 0
திருகோணமலை, பன்மதவாச்சி காட்டுப்பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் புதன்கிழமை  (20.03.2019) மீட்கப்பட்டுள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். பன்குளம், பன்மதவாச்சியைச் சேர்ந்த முத்துலிங்கம் ஸ்ரீதர் என்ற 57 வயதுடைய ஒருவரே…

Leave a comment

Your email address will not be published.