2018 ஜனவரி மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 8 தசம் 9 சதவீதத்தால் அதிகரித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
2017 டிசம்பர் மாதத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்திருந்தது. அது 2 இலட்சத்து 44 ஆயிரத்து 536 ஆக பதிவாகியிருந்தது. அதற்கு அடுத்ததாக கடந்த ஜனவரி மாதம் கூடுதலான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதன்படி 2 இலட்சத்து 38 ஆயிரத்து தொள்ளாயிரத்து 24 பேர் வந்திருப்பதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

