வவுனியா நகர சபையை தமிழர் விடுதலைக் கூட்டணி கைப்பற்றியது

366 0

வவுனியா நகர சபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த இராசலிங்கம் கௌதமன் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா நகரசபைக்கான தவிசாளர் தெரிவு, வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில், வவுனியா நகரசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.

இதன்போது பகிரங்க வாக்களிப்பு நடத்தப்பட்டு, கூட்டமைப்பின் சார்பாக போட்டியிட்ட நாகலிங்கம் சேனாதிராசாவுக்கு ஆதரவாக 9 வாக்குகளும், தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த கௌதமனுக்கு ஆதரவாக 11 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

இதனடிப்படையில் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த கௌதமன் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

Leave a comment