இந்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் கைக்குண்டு ஆகியவற்றை வைத்திருந்த நபர் ஒருவர் ஹிக்கடுவை பண்டாரவத்த பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் கைது செய்யப்பட்ட வேளையில் அவரிடமிருந்து 3கிராம் 450மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது மீடியாகொட பொலிஸ் பிரிவுற்குற்பட்ட சந்தேகநபரின் மனைவியின் வீட்டிலிருந்து இந்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி 9மில்லிமீட்டர் ரக 3ரவைகள், செயலிழக்கச்செய்யப்படாத கைக்குண்டு ஆகியன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் காலி கிந்தோட்டை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய நபர் எனவும் அவர் இன்று காளி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்

