மஹிந்தவுடன் சேர மாட்டோம், எதிரணியில் அமர்வோம் – SLFP 16 அமைச்சர்கள்

344 0

தான் உட்பட ஏனைய 16 பேரும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியில் அமரப் போவதில்லையென முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து இராஜினாமா செய்த 16 பேரும் ஜனாதிபதியை நேற்றிரவு(11) சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அனுர பிரியதர்ஷன யாப்பா இவ்வாறு கூறியுள்ளார்.

தாம் பாராளுமன்றத்தில் எதிரணில் அமர்வோம். ஆனால், ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காக உழைப்போம்.

ஐ.தே.கட்சியின் பின்னாசன எம்.பி.க்களின் கோரிக்கையினால் தாங்கள் பதவி விலகியதாக கூறப்படுகின்றதே என அமைச்சரிடம் வினவிய போது,

தான் மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றத்தில் உள்ளோம். நாம் எமது மனச்சாட்சிக்கு ஏற்ப பணியாற்றுகின்றோம். இதனால், ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னாசன எம்.பிக்களது கோரிக்கைக்கு செவிமடுக்க தேவையில்லை.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள சகல உறுப்பினர்களும் அரசாங்கத்திலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை கட்சியின் மத்திய செயற்குழுவிடம் விடுத்துள்ளதாகவும் அனுரபிரியதர்ஷன யாப்பா எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment