காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை!

245 0

காவிரி விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைப்பதை தாமதப்படுத்தும் மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வெடித்துள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு வகையான போராட்டங்கள் நடந்து வருகிறது. விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரலங்கள் பலரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ராணுவ கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை சென்னை வந்துள்ளார். பல்வேறு தரப்பினரும் மேதடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி போராட்டங்கள் நடந்து வருகிறது.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் பிரதமர் மோடிக்கு வீடியோ வடிவில் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அந்த வீடியோவில்,
ஐயா வணக்கம், இது கமல்ஹாசன், நான் உங்கள் குடிமகன், இது என் மாண்புமிகு பிரதமருக்கு நான் அனுப்பித் தரும் ஒரு திறந்த வீடியோ, தமிழகத்தில் நிலவும் இந்த நிலை தாங்கள் அறியாததல்ல, தமிழக மக்கள் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். நீதி வழங்கப்பட்டாகிவிட்டது. ஆனால் செயல்படுத்த வேண்டியது உங்கள் கடமை. பாமரர்களும், பண்டிதர்களும் இந்த காலதாமதம் கர்நாடக தேர்தலுக்காகத் தான் என்று நம்பத் துவங்கி விட்டார்கள். அது ஆபத்தானது. அவமானகரமானதும் கூட, இதை நீங்கள் மாற்றுவீர்கள் என்று நம்புகிறோம். தமிழர்களுக்கும், கர்நாடக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நீதி கிடைக்க காவிரி மேலாண்மை வாரியத்தை நீங்கள் அமைத்தே ஆக வேண்டும். அது உங்கள் கடமை. நினைவுறுத்த வேண்டியது என் உரிமை. இங்கே இந்த வீடியோவில் சொல்ல மறந்த வார்த்தைகளை கடித வடிவிலும் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். தயது செய்து செயல்படுங்கள். இன்றலை மாற வழி செய்யுங்கள். வணக்கம். வாழ்க இந்தியா. நீங்களும். இவ்வாறு கோரிக்கை வைத்துள்ளார்.

 

Leave a comment