எரிபொருள் விலையை நிலைபேறாக பேண நடவடிக்கை – அரசுக்கு 989 கோடி நஷ்டம்

364 0

அரசாங்கம் பெரும் நஷ்டத்தின் மத்தியிலும் எரிபொருள் விலையை நிலைபேறாக பேணுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப் பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ஒரே தலைவர், ஒரே வேலைத்திட்டம், ஒரே அரசாங்கம் என்ற கோட்பாட்டின் கீழ் அரசாங்கம் எதிர்காலத்திலும் செயற்படும் தர்க்க ரீதியான விடய தானங்களின் அடிப்படையில், புதிய அமைச்சரவையை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. புத்தாண்டுக்கு முன்னர் அமைச்சரவை நியமிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கம் பெரும் நஷ்டத்தின் மத்தியிலும் எரிபொருள் விலையை நிலைபேறாக பேணுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை மாற்றங்களை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருகிறது. கடந்த இரு மாதங்களில் மாத்திரம் குறைந்த விலையில் எரிபொருளை விநியோகித்தால் அரசாங்கம் 989 கோடி ரூபா நஷ்டத்தை எதிர்கொண்டது என்றும் சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப் பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.

Leave a comment