சிறைச்சாலை திணைக்களத்தின் புனர்வாழ்வு ஆணையாளரும் மகசின் சிறைச்சாலையின் முன்னாள் அத்தியாகச்சருமான எமில் ரஞ்சன் லமஹேவா மற்றும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப்பிரிவின் பொறுப்பதிகாரி நியோமல் ரங்கஜீவ ஆகியோரை எதிர்வரும் ஏப்ரல் 24 ஆம் திகதி வரை மீண்டும் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2012 ம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பாக குறித்த இருவரும் மார்ச் 28 ம் திகதி குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

