வடமாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் சகிதம் இன்று முல்லைத்தீவுக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, முல்லைத்தீவில் இடம்பெற்று வரும் சிங்களக்குடியேற்றம் தொடர்பில் ஆராய்ந்துள்ளதுடன், கொக்கிளாயில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுவரும் விகாரை, சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கை என்பவற்றை பார்வையிட்டதுடன், அவை தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்

