ரிஷாட் தலைமையிலான வர்த்தக தூதுக்குழு லண்டன் விஜயம்

351 0

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான 50பேர் கொண்ட வர்த்தக தூதுக்குழு ஒன்று அடுத்தவாரம் லண்டனுக்கு விஜயம் செய்யவுள்ளது.

லண்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய வர்த்தக அமைப்பில் கலந்துக்கொள்வதற்காக இந்த விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.

1997ஆம் ஆண்டு தொடக்கம் இடம்பெறும் பொதுநலவாய நாடுகளின் வர்த்தக அமைப்பின் கூட்டம் இம்முறையே முதன்முதலாக லண்டனில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து என்றுமில்லாத வகையில் பெரும்பாலான வர்த்தகர்கள் பங்கேற்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

Leave a comment