மைத்திரியும், மஹிந்தவும் எனது இரு கண்கள் -ஆறுமுகன் தொண்டமான்

17226 27

தனக்கு இரண்டு கண்கள் உள்ளதாகவும் அதில் ஒன்று தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எனவும் மற்றது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

இன்று (01) முன்னாள் ஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்வொன்று நுவரெலியாவில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இதுவரை ஏன் கையொப்பமிடவில்லையென்பது தனக்கு புரியாத புதிராகவே உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அவருக்கு அருகில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்,

தான் இதுவரையில் இந்த அரசாங்கம் குறித்து நம்பிக்கையில்லாமலேயே இருப்பதாகவும், நம்பிக்கையில்லாப் பிரேரணையில் மாத்திரம் ஒப்பமிடத் தேவையில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment