ரி.என்.ஏ.யின் தீர்மானம் நாளை

1434 0

வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவிப்பதா? எதிர்ப்பதா? என்பது தொடர்பில் நாளை (02) தனது தீர்மானத்தை வெளியிடவுள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும், பாராளுமன்ற எதிர்க் கட்சியினதும் தலைவர் ஆர். சம்பந்தன் தலைமையில் நாளை இது தொடர்பிலான கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானமே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் என அரசியல் தரப்புக்களில் வெகுவாக பேசப்பட்ட ஒரு விடயம் என்பது முக்கியமானது.

Leave a comment