நம்பிக்கையில்லாப் பிரேரணை நிச்சயம் வெற்றிபெறும் – பந்துல குணவர்தன

379 0

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை நிச்சயமாக வெற்றிபெறும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்

மேலும் நான்காம் திகதிக்குப் பின்னர் நாட்டில் அரசியல் பயணம் முற்றாக மாற்றமடையும் எனவும் பந்துல் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு கிடைப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நாட்டில் கடந்த மூன்று வருடங்களாக விவசாயம், தொழிற்துறைகளில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது, முறிகள் கொடுக்கல் வாங்கலினால் பாரிய கொள்ளை இடம்பெற்றுள்ளது, இவற்றிற்கு எதிராக, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை ஒன்றிணைந்த எதிர்கட்சி மேற்கொண்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment