ஹெரோயினுடன் மூவர் கைது

328 0

ஹபராதுவ ஒபரகோட மற்றும் யக்கஹ பகுதிகளில் ஹெரோயின் வைத்திருந்த மூவர் காலி சட்ட அமுலாக்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர்களிடமிருந்து 1120 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை யக்கஹ பகுதியில் கைது செய்யப்பட்டவரிடம் 660 மில்லிகிராம் ஹெரோயின் காணப்பட்டதாகவும் அவர் ஒரு போதைப்பொருள் வியாபாரி என கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நபர்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுபவர்கள் எனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Leave a comment