இந்தியாவின் கேரளா பிராந்தியத்தைச் சேர்ந்த குழுவொன்று ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணைந்து கொள்ளும் நோக்கில் இலங்கையில் பாதுகாப்பாக மறைந்திருந்த போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்துஸ்தான் செய்திப் பத்திரிகையொன்று அறிவித்துள்ளது.
கடந்த 2016 ஆண்டு முதல் இந்தியாவின் கேரளா பிராந்தியத்திலிருந்து 90 பேர் ஐ.எஸ். அமைப்பில் இணைந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அப்பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறு பிடிபட்டவர்களுள் பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் பணியாற்றிய கேரளா நாட்டைச் சேர்ந்த ஒருவரும் உள்ளதாகவும் அப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சகோதர ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

