ரணிலை வைத்திருப்பதா? வீட்டுக்கு அனுப்புவதா? என்ற முடிவு ஜனாதிபதியின் கையில்- மஹிந்த

356 0

நாம் செய்ய வேண்டியதை செய்து விட்டோம் எனவும் தற்பொழுது எஞ்சியுள்ளது ஜனாதிபதியின் பங்கு எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நுவரெலியா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு விட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாம் கொண்டு வந்துள்ளோம். தற்பொழுது அதனை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவைப் பெற்று வெற்றிபெறச் செய்வது ஜனாதிபதியின் கைகளிலேயே உள்ளது எனவும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment