விமல் வீரவங்சவின் மகளான விமாசா விஷ்வாதாரிக்கு கிடைத்த பெறுபேறு அனைத்து அரசியல் விமர்சனங்களையும் கரையோடிப்போகச்செய்துள்ளது!

224 0

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச பாடசாலை கல்வியினை நிறைவு செய்யவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

எனினும் அதனை நிராகரித்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, தாம் கல்வியினை நிறைவு செய்யவில்லையாயின் அதனை நிரூபிக்குமாறும், நிரூபிக்கும் பட்சத்தில் தாம் அரசியல் வாழ்க்கையினை துறந்து செல்வதாகவும் அண்மையில் நாடாளுமன்றில் இடம்பெற்ற அமர்வொன்றின் போது தெரிவித்திருந்தார்.

ஆளும் தரப்பினரின் இவ்வாறான கருத்துக்களை செவிமெடுத்தும், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சம்பவங்களை பார்வையுற்றும் உள ரீதியாக பாதிக்கப்பட்ட அவரது மகள் சாதாரண பரீட்சைக்கு தோற்றியுள்ள விதம் அனைவரை அகலவிழிகொள்ளச் செய்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்வி பொது தராதர பத்திர சாதாரணதர பரீட்சையில் விமல் வீரவங்சவின் மகளான விமாசா விஷ்வாதாரி பெரும் மனசங்கடங்களுக்கு மத்தியில் தோற்றியிருந்தார்.

இந்நிலையில் கல்வி பொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின. விமல் வீரவங்சவின் மகளான விமாசா விஷ்வாதாரிக்கு கிடைத்த பெறுபேறு அனைத்து அரசியல் விமர்சனங்களையும் கரையோடிப்போகச்செய்துள்ளது.

ஒன்பது பாடங்களிலும் அதி திறமை சித்தியான (ஏ) சித்தியை பெற்று தனது தந்தைக்கான கலங்கத்தினை அகற்றியுள்ளதோடு, பெற்றோருக்கும் குடும்பத்திற்கும் பெருமையை சேர்ப்பித்துள்ளார். அத்துடன் சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளதோடு அரசியல் பிரதிநிதிகள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Leave a comment