முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது (2009) தாய் மற்றும் மூன்று சகோதரர்களும் படையினரின் எறிகணைத் தாக்குதலில் உயிரிழந்த நிலையில் மனம் தளராது மாணவன் ஒருவர் கல்வி பொதுத்தராதர சாதராணதரப் பரீட்சையில் 9ஏ பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் கல்வி கற்ற இராசேந்திரம் பிரதீபன் என்னும் மாணவனே கல்வி பொதுத்தராதர சாதராணதரப் பரீட்சையில் 9ஏ பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளார்.
இதுகுறித்து மாணவன் கூறியதாவது;
இந்த துயரச் சம்பவம் என் மனதை பெரிதும் பாதித்திருந்தது. இருப்பினும் என் தந்தையின் அரவணைப்பினாலும் அதிக ஊக்கத்தினாலும் இன்று 9ஏ பெறுபேறுகளை பெற்றுள்ளேன் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து கணிதத் துறையில் கல்வியை கற்று ஒரு விமானியாக வருவதே என் எதிர்கால இலட்சியம் என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் தோற்றிய 12 மாணவர்களில் இரண்டு மாணவர்கள் 9ஏ பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.

