பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் 4 ஆம் திகதி காலையிலோ 3 ஆம் திகதி இரவிலோ ஸ்ரீ ல.சு.க. முடிவு செய்யும் என சுதந்திரக் கட்சி பொருளாளர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
கட்சியின் பாராளுமன்ற குழுவும் மத்திய குழுவும் ஒன்றாக கூடி ஆராய்ந்ததன் பின்னர் இது தொடர்பில் முடிவு செய்யும் எனவும் அவர் கூறினார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்ப்பதற்கு சுதந்திரக்கட்சிக்கு கடினமான விடயம். அதற்கு எந்த நியாயமான காரணமும் கிடையாது. நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு அரசாங்கத்தில் உள்ள கட்சி என்ற ரீதியில் காத்திரமான முடிவு எடுக்க இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

