மலேசியத் தாக்குதலுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தலைவர் கண்டனம்(காணொளி இணைப்பு)

463 0

r-sampanthanமலேசியாவிற்கான இலங்கைத்தூதுவர் மீது நடாத்தப்பட்ட தாக்குதலுக்கு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்,
மலேசியாவிற்கான இலங்கைத்தூதுவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவமானது, நாட்டில் எப்போதும் குழப்ப நிலை இருக்க வேண்டும் என விரும்பும் அரசியல் நோக்கம் கொண்டவர்களால் மேற்கொள்ளப்பட்ட முட்டாள் தனமான தாக்குதல் என்று விமர்சித்துள்ளார்.
இத்தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகக் குறிப்பிட்ட இரா.சம்பந்தன், தாக்குதல் நடாத்தியவர்களில் இலங்கையர்கள் எவரும் இல்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
ஆனால் இலங்கையர்கள் யாராவது குறித்த தாக்குதலுடன் சம்பந்தப்பட்டிருந்தால், அவர்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாடு ஸ்திரத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் வேளையில், இவ்வாறான சம்பவங்கள் தேவையற்றதெனவும், இது ஒரு மடைமைத்தனமான செயல்; என்றும் எதிர்க்கட்சித்தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கையின் ஸ்திரத்தன்மையை விரும்பாதவர்களின் செயற்பாடே இத்தாக்குதல் என்று குறிப்பிட்ட இரா.சம்பந்தன், இத்தாக்குதல் அரசியல் நோக்கம் கொண்டது என்றும், இதனால் நாட்டுக்கு எவ்வித நன்மையும் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் குறித்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

https://youtu.be/H0IUhZz2J5U