கூட்டு எதிர்க் கட்சியின் தாளத்துக்கு ஆடினால், அரசாங்கத்தில் இருக்க கூடாது- UNP

377 0

அரசாங்கத்திலுள்ள எந்தவொரு அமைச்சராவது கூட்டு எதிர்க் கட்சியின் தாளத்துக்கு ஆடுவதற்கு முனைவார்களாயின் அவர்களை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை பிரதமர் ரணிலுக்கு எதிரானது மட்டுமல்ல எனவும் அரசாங்கத்துக்கு எதிரானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஊடகவியலாளர்களிடம் நேற்று கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்

Leave a comment