ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்கப்போவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டதனை தொடர்ந்து அதிலிருக்கும் விடயங்கள் தொடர்பில் ஆராய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அக்கட்சியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தில் இரு பக்கத்தில் பலம் காணப்படுவதாகவும் ஒரு பக்கம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் மறுபக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் கடந்த மூன்று வருடங்களாக இந்த இரண்டு பலமும் முரண்பாடுகளுடனேயே காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

