ஆசியாவின் அச்சுத்தொழில் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றியமைப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும்-ரணில்

339 0

அச்சு சார் தொழில் துறைக்கு வசதிகளை வழங்கும் கைத்தொழில் நகரமொன்று நாட்டில் உருவாக்கப்படவுள்ளது.

இதன் மூலம் ஆசியாவின் அச்சுத்தொழில் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றியமைப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஷங்ரில்லா ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற இலங்கை அச்சு துறை சார் சிறப்பு விருது விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை அச்சக தொழிலாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போதைய அரசாங்கம் இந்தத் துறைக்கான பல வசதிகளைச் செய்துள்ளதெனவும் தேவையான மேலதிக வசதிகளை வழங்கவும் தயார் எனவும் நாட்டின் முன்னேற்றத்திற்காக நாம் உலக சந்தையை வெற்றி கொள்ள வேண்டும். இதற்காக நாட்டின் ஏற்றுமதித் துறை அபிவிருத்தியடைய வேண்டும். தரமான உற்பத்திகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment