புதிய தேசிய பாடசாலைகளை அமைக்க கல்வி அமைச்சுக்கு பரிந்துரை

333 0

புதிய முறைமையிலான தேசிய பாடசாலை அமைப்பதற்கு தேவையான கொள்கைகளை வகுக்குமாறு அமைச்சரவை கல்வி அமைச்சிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்பொழுது வரை நாட்டில் 353 தேசிய பாடசாலைகள் உள்ளன. மேலதிகமாக தேசிய பாடசாலைகளை உருவாக்குவதற்கு தேவையான வரையறைகளை அறிவிக்குமாறே கல்வி அமைச்சுக்கு அமைச்சரவை அறிவித்துள்ளது.

தற்பொழுது நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளே உரிய தகைமை இல்லாத நிலையில் புதிய தேசிய பாடசாலைகளை அமைப்பது தேவையற்ற ஒன்று என்பது அமைச்சரவையிலுள்ள பெரும்பாலானோரின் கருத்தாகும்.

Leave a comment