அமித்தின் மனைவிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு செல்ல உரிமை உண்டு- பொலிஸ்

6 0

மஹசொன் அமித்தின் மனைவிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்வதற்கு உரிமையுள்ளது. அது அவரின் தனிப்பட்ட உரிமை எனவும், அவரது முறைப்பாடு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்கும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன குணசேகர தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.

அமித்தின் கைது குறித்து அவரது மனைவி நேற்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் இது குறித்து பொலிஸாரின் நடவடிக்கை எதுவாக இருக்கும் எனவும் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவரின் மனைவிக்குள்ள உரிமையை அவர் மேற்கொள்கின்றார். பொலிஸாரின் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்ளும். ஆணைக்குழு வேண்டினால், நாம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்துவோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Post

இரு ஆசிரியர் காரணமாக பாடசாலைக்கு சமூகமளிக்காத மாணவர்கள்

Posted by - January 12, 2018 0
400ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட வெளிஓயா மலைமகள் தமிழ் வித்தியாலயத்தில் இன்று (12) 130 மாணவர்களே சமூகமளித்துள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.…

10,000 இராணுவத்தினர் சட்டபூர்வமாக விலகியுள்ளனர்!

Posted by - July 2, 2016 0
சிறீலங்கா இராணுவத்திலிருந்து தப்பியோடிய 10ஆயிரம் இராணுவத்தினர் அண்மையில் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பினடிப்படையில் தாமாக முன்வந்து இராணுவத்திலிருந்து விலகிக்கொண்டுள்ளனர்.

வடக்கு அரச திணைக்கள பணியாளர்கள் மாகாண சேவைக்குள் ஈர்ப்பு!

Posted by - April 30, 2017 0
வடக்கு மாகாண அரச திணைக்­கள நிலை­யங்­க­ளில் பணி­யாற்­றும் அனைத்­துப் பணி­யா­ளர்­க­ளும் மாகாண சேவைக்­குள் உள்­ளீர்க்­கப்­ப­ட­வுள்­ள­னர். இது­வரை மாகாண சேவைக்­குள் உள்­ளீர்க்­கப்­ப­டாத பணி­யா­ளர்­கள் உரிய படி­வங்­கள் மூலம் பொது…

மக்களுக்கு அரச அதிகாரிகள் பணிய வேண்டும்-அமைச்சர் வஜிர அபேவர்தன (காணொளி)

Posted by - September 11, 2016 0
அரச  அதிகாரிகள்  ஒவ்வொருவரும்  நாட்டு மக்களின் ஆணைக்குப்  படிந்து  சேவை  செய்ய வேண்டுமென்றே  அரசியல்  அமைப்பு  வலியுறுத்துவதாக,  உள்நாட்டலுவல்கள்  அமைச்சர்  வஜிர அபேவர்தன  தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு  மாவட்ட…

ஜே.வி.பி.யின் போராட்டத்தில் பொது நோக்கமில்லை – ரோஹித

Posted by - October 22, 2018 0
அரசாங்கத்தின்  முறையற்ற நிர்வாகத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் நாளை மேற்கொள்ளும்  போராட்டம் அவர்களின் அடுத்த அரசியல் இருப்பினை  தக்கவைத்துக் கொள்வதற்காகவே அன்றி பொது நோக்கம் ஏதும்…

Leave a comment

Your email address will not be published.