வடக்கில் இராணுவம் நடத்தும் முன்பள்ளிகள் இனி மாகாண சபையிடம்

7 0
இராணுவ நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் முன்பள்ளிகளை வடமாகாண சபையிடம் ஒப்படைப்பதற்கான கோரிக்கையினை யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றில் முன்வைப்பதற்கான தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் 118வது அமர்வு இன்று (13) வடமாகாண சபையின் பேரவை செயலக சாப மண்டபத்தில் நடைபெற்ற போது வடமாகாண சபையின் அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இதனை தெரிவித்தார்.

இதன்போது, யாழ். தேர்தல் மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று கூடியிருந்தது. இதன்போது இராணுவத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் முன்பள்ளிகளை வடமாகாண சபையிடம் ஒப்படைப்பது தொடர்பில் தெளிவாக ஆராயப்பட்டது.

அதில் இராணுவம் நிர்வகிக்கும் முன்பள்ளிகள் அனைத்தையும் வடமாகாண சபையிடம் ஒப்படைக்க வேண்டும் என பாராளுமன்றில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதென தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. அதனை பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து முன்னெடுப்பார்கள் என அவை தலைவர் மேலும் கூறினார்.

இதன்போது கருத்து தெரிவித்த மாகாண கல்வி அமைச்சர், இராணுவம் நிர்வகிக்கும் முன்பள்ளிகளில் மாணவர்களுக்கு இராணுவ ஒழுக்கங்கள் போதிக்கப்படுவதாகவும், மாணவர்களுக்கு சீருடைகளும் இராணுவ சீருடைகளை ஒத்ததாக வழங்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் மேற்படி முன்பள்ளிகளை வடமாகாண சபை பொறுப்பேற்றால் அவர்களுக்கு இப்போது வழங்கப்படும் ஊ தியம் 30 ஆயிரம் ரூபாய் வரை காணப்படுவோல் மற்றய முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் அதே அளவு ஊதியத்தை வழங்கவேண்டிய நிலை வரும், இல்லையேல் ஏற்றத்தாழ்வுகள் வரும் என கூறினார்.

இதற்கு மீண்டும் பதிலளித்த அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், இராணுவம் நிர்வகிக்கும் முன்பள்ளிகளை மட் டுமல்லாமல் அந்த முன்பள்ளிகளுக்காக பாதுகாப்பு ஊடாக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியையும் வடமாகாண சபையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றே பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த விடயத்தை சரி செய்யலாம் எனவும் அவர் கூறினார்.

Related Post

கேப்பாபுலவு மக்களின் போராட்டத்துக்கு நீதிமன்றம் அனுமதி

Posted by - February 13, 2018 0
தமது காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாபுலவு மக்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் தமது போராட்டத்தை தொடரலாமென, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் அனுமதியளித்துள்ளார்.…

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கட்சி அரசியலை அடிப்படையாக கொண்டு செயற்படவில்லை-கஜேந்திரகுமார்(காணொளி)

Posted by - January 27, 2018 0
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கட்சி அரசியலை அடிப்படையாக கொண்டு செயற்படவில்லை எனவும், தேசிய அரசியலை நோக்காக கொண்டே செயற்படுவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார்…

பிரான்சில் இடம்பெற்ற கேணல் பரிதி அவர்களின் 6 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வும் கண்டன ஒன்று கூடலும்!

Posted by - November 9, 2018 0
பாரிசில் 08.11.2012 அன்று படுகொலை செய்யப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சின் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்கள் 6 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு இன்று…

யாழ் பல்கலைக்கழகத்தில் மோதல் – 10 பேர்வரை காயம் – படங்கள் இணைப்பு

Posted by - July 16, 2016 0
யாழ். பல்கலை கழத்தினுள் தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று இன்று சனிக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் மத்தியிலையே மோதல் இடம்பெற்றுள்ளது.…

சர்வதேச நீதிபதிகள், கலப்பு நீதிமன்றத்தை உருவாக்கும் சட்டத்தை இலங்கை கொண்டுவர வேண்டும்

Posted by - March 4, 2017 0
சர்வதேச மனித உரிமைச் சட்ட மற்றும் மனிமாபிமானச் சட்ட மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்கு, சர்வதேச நீதிபதிகள், சட்டவாளர்கள், வழக்குத்தொடுனர்கள், விசாரணையாளர்களை உள்ளடக்கிய, கலப்பு நீதிமன்றத்தை உருவாக்கும்…

Leave a comment

Your email address will not be published.