வைபருக்கான (Viber) தடை இன்று நள்ளிரவு முதல் நீக்கம்- அரசாங்கம்

5 0

கண்டி பிரதேசத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட தீவிரவாத தாக்குதல் நிலைமையைக் கருத்தில் கொண்டு சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையில், மாற்றங்களை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், இதன்படி, வைபருக்கு (Viber) விதிக்கப்பட்டிருந்த தடை இன்று (13) நள்ளிரவு முதல் நீக்கப்படுவதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனினும் பேஸ்புக், வட்ஸ்அப் உள்ளிட்ட ஏனைய சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை எதிர்வரும் நாட்களில் நீக்கப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முகநுால், வைபர், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசிப்பதை இடைநிறுத்துவதற்கு தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு கடந்த 7 ஆம் திகதி தீர்மானம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post

பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை தயாரித்த 2716 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு!

Posted by - April 13, 2017 0
பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை உற்பத்தி செய்த 2716 நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 10 நாடுகளுக்கு புதிய தூதுவர்கள் நியமனம்-சிறிசேன

Posted by - August 12, 2018 0
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் தொலைநோக்கு தொடர்பில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இலங்கையின் வெளிநாட்டுக்…

அரச சேவையில் நிலவுகின்ற சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு வேண்டும்

Posted by - August 18, 2018 0
புதிய சம்பள ஆணைக்குழுவினால் அரச சேவையில் தற்போது நிலவுகின்ற சம்பள முரண்பாடுகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. 

நேபாளியர்கள் இலங்கையில் இருக்கலாம் – விசாரணைகள் தொடர்கின்றன.

Posted by - August 9, 2016 0
இலங்கையில் மேலும் தமது நாட்டின் பிரஜைகள் பதுங்கி இருக்கின்றனரா? என்பது தொடர்பில் நேபாள அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேபாளத்தின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த…

தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை தலைவரின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - October 18, 2018 0
இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் தலைவர் கே.எம். முத்துவிநாயம் உள்ளிட்ட இருவரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இருவரையும் எதிர்வரும்…

Leave a comment

Your email address will not be published.