கொஸ்கம -சலாவ ஆயுத களஞ்சிய வெடிப்புச் சம்பவத்தினால் 12 பில்லியன் ரூபா நட்டம்!

292 0

கொஸ்கம -சலாவ ஆயுத களஞ்சிய வெடிப்புச் சம்பவத்தினால் 12 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய குழுவினால் நட்டம் தொடர்பான மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 14 இராணுவ உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.இந்த வெடிப்புச் சம்பவத்தினால் சேதமடைந்த வர்த்தக நிலையங்கள் உள்ளிட்டனவற்றை நிர்மாணிப்பதற்கு இராணுவத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் அண்டு ஜுன் மாதம் 5ஆம் திகதி சாலவ ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 47 வரையில் காயமடைந்திருந்தனர்.இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வு நிறுவனத்திற்கு தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கை கிடைக்கும் வரையில் சம்பவத்திற்கான காரணங்களை சரியாக வெளியிட முடியாது என தெரிவித்துள்ளார்.

Leave a comment