தமிழ் இன அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவாவில் பேரணி!

13 0

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கோரி நேற்று ஜெனிவாவில் மாபெரும் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. ஜெனிவா ரயில் பநிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் ஆரம்பமாகிய பேரணி, ஜெனிவா முருகதாசன் திடலில் நிறைவடைந்தது.

பல தசாப்தங்களாக இலங்கையில் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப் படுகொலையை முழுமையாக ஆராய வேண்டும். ஐக்கிய நாடுகள் அவை மார்ச் 2011 அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக சமூகம், அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடத்தி தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும். இவ்வாறு ஐந்து அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஐ.நா முன்றலில் சீரற்ற காலநிலையிலும் தமிழீழ இலட்சியப்பற்றுடன்
கொள்கைக்காக அணிதிரண்ட ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள்!!

தமிழின அழிப்பிற்கான நீதியை சர்வதேச விசாரணை மூலம் பெற்றுத்தாருங்கள் என்ற உரிமை முழக்கத்தோடு, ஐ.நா முன்றலில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் அணிதிரண்ட ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் தங்கள் தேசத்தின் மீதான பற்றுருதியை மீண்டுமொருமுறை அனைத்துலகத்தின் காதுகளுக்கு உரத்துக் கூறினார்கள்.


12.03.2018 திங்கட்கிழமை அன்று சுவிஸ் நாட்டின் ஜெனிவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு பேரணியானது உலகத்தமிழர்களின் ஒன்றுபட்ட உரிமைக்குரலாக ஒலிக்க, அவர்கள் தாங்கிய பதாகைகள் மூலம் வேற்றின மக்களுக்கு எடுத்துரைத்து, நகர்ந்து ஈகைப்பேரொளி முருகதாசன் திடலை வந்தடைந்தது.
பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகிய ஒன்றுகூடலானது தமிழீழத் தேசியக்கொடி வானுயர ஏற்றப்பட்டு ஈழத்தமிழர்களின் விடியலுக்காக தீயினில் தம்மையே ஆகுதியாக்கிய ஈகைப்பேரொளிகளுக்குரிய ஈகைச்சுடர்களும் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவித்தலுடன் அகவணக்கம் மலர்வணக்கத்துடன் உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.


புலம்பெயர் நாடுகளில் பிறந்து, வளர்ந்து வாழ்ந்தாலும் தமது வேர்களைத் தேடி அதன் இருப்புக்காக உரத்துக் குரல்கொடுத்த தமிழ் இளையோர்களின் பங்கு இப்பேரணியில் சிறப்பாக அமைந்ததுடன் தமது வாழிட மொழிகளில் புலமைத்துவத்துடனும், ஆளுமையுடனும் ஆற்றிய உரைகள் மக்களின் மனதை நெகிழவைத்தது. இக் கவனயீர்ப்புப் பேரணியில் வேற்றின மொழியிலான எழுச்சி உரைகளுடன், பேரணிக்கான பிரகடனமும் இடம்பெற்றிருந்தன.
தமிழீழத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கு சர்வதேசவிசாரணை நடாத்த வேண்டுமெனவும்;, தமிழீழத்திற்கான சர்வசன வாக்கெடுப்பு ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் நடாத்தக் கோரியும் வலியுறுத்திய இப் பேரணியில் பன்னிரண்டு நாட்களாக ஈருருளிப் பயணத்தை மேற்கொண்ட மனிதநேய செயற்பாட்டாளர்கள் தாம் பயணித்த நாடுகளில் சந்தித்த அரசியல் பிரமுகர்களிடம் வரலாறு தங்களுக்கு வழங்கிய கடமையின் நோக்கத்தை எடுத்துரைத்ததோடு, பேரணியின் போது ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் காரியாலயத்தில் அரசியற் சந்திப்பும் நடைபெற்றதுடன் பேரணி தொடர்பாக கோரிக்கைகள் அடங்கிய மனுவும் கையளிக்கப்பட்டது. ஈழத்தமிழர்களின் இன்றைய நிலையும், இன்றும் தொடரும் கட்டமைப்புசார் இனவழிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்திப் பேசப்பட்டது.


தமிழீழம் என்ற தேசம்தான் தங்கள் வாழ்வை வளமாக்கும் என்பதிலே உறுதி கொண்டிருந்த மக்கள், தேசத்தை மீட்டெடுக்க எல்லாவித அர்ப்பணிப்புக்களையும் செய்யத் தயாராக இருப்பதாக தமிழீழத் தேசியத் தலைவருக்கும், மாவீரர்களுக்கும் உறுதி வழங்கி நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன் தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு தமிழர்களின் தாரக மந்திரத்துடன் தணியாத தாகத்துடன் கலைந்து சென்றனர்.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.

Related Post

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்திற்கு தீர்வு பெற்று கொடுப்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் பொறுப்பு – சுமந்திரன்

Posted by - March 30, 2017 0
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்திற்கு தீர்வு பெற்று கொடுப்பதே சர்வதேசத்தினதும் தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் பொறுப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதனை முதன்மையாக…

வாக்கு போடுபவர்களாக மட்டும் இருக்காது வாக்களித்தவர்களிடம் கேள்வி கேட்பவர்களாகவும் மக்கள் மாறவேண்டு! அமைச்சர் அனந்தி சசிதரன்

Posted by - October 24, 2017 0
வாக்கு போடுபவர்களாக மட்டும் இருக்காது வாக்களித்தவர்களிடம் கேள்வி கேட்பவர்களாகவும் மக்கள் மாறும்போதுதான் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என, யாழ் மாவட்டத்தின் சிறந்த கூட்டுறவாளர்களை கௌரவித்தல் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு…

குற்றப்பத்திரிகையின் குற்றங்களை ஏற்றுக்கொள்ள தயார் – முன்னாள் போராளிகள் இருவர் தெரிவிப்பு

Posted by - June 27, 2017 0
தமக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றப்பத்திரிகையின் குற்றங்களை ஏற்றுக்கொள்ள தயார் என முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இருவர் அறிவித்துள்ளனர். அநுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றில்…

வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் ‘நல்லூர் பிரகடனம்’ வெளியீடு

Posted by - April 5, 2017 0
வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் ‘நல்லூர் பிரகடனம்’ என்ற பெயரில் பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை வெளியிட்டனர். நேற்று இந்த கொள்கை பிரகடனம் வெளியிடப்பட்டது. வடக்கில் பொதுமக்களுக்கு சொந்தமான…

கறை படிந்த கைகளுக்கு வாக்களிக்கப் போகின்றீர்களா தூய கரங்களுக்கு வாக்களிக்கப் போகின்றீர்களா? – யாழ் மாநகர முதன்மை வேட்பாளர் மணிவண்ணன்

Posted by - February 5, 2018 0
மக்களாகிய உங்களைக் கொன்றுகுவித்த, நீங்கள் காட்டிக்கொடுக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட கறைபடிந்த கரங்களோடு உங்கள் முன் வந்து நிற்கின்றவர்களுக்கு நீங்கள் வாக்களிக்கப்போகின்றீர்களா ?

Leave a comment

Your email address will not be published.