அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் நேற்று பூரண ஹர்த்தால் (காணொளி)

11 0

நாடளாவிய ரீதியில் முஸ்லீம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் வன்முறைகளை எதிர்த்தும், கண்டித்தும் அம்பாறை மாவட்டத்தில் நேற்று ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது.

இதற்கமைய அம்பாறையில் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பாலமுனை, ஒலுவில், கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை மற்றும் முஸ்லிங்கள் வாழும் பல பிரதேசங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

குறித்த பிரதேசங்களின் வீதிகளில் டயர் எரித்து போக்குவரத்திற்கு தடையேற்படுத்தி வருவதாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முஸ்லிம் பிரதேசங்களில் பூரண ஹர்த்தாலுடன், கடையடைப்பும் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது.

இதனால் குறித்த பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள், வங்கிகள், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், கடைகள் போன்றன மூடப்பட்டும், வைத்தியசாலைகள், அரச நிறுவனங்கள் ஸ்தம்பிதம் அடைந்தும் காணப்படுகின்றன.

Related Post

2 மாதங்களுக்குள் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்- சிறிசேன

Posted by - February 6, 2019 0
எந்தவித எதிர்ப்பு வந்தாலும் எதிர்வரும் இரண்டு மாதத்துக்குள் போதைப் பொருள் குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்…

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிக்குக – தமிழக முதலமைச்சர் மீண்டும் வலியுறுத்து

Posted by - July 30, 2017 0
இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 107 படகுகளையும் விடுவிக்குமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தமிழக கடற்தொழிலாளர்கள் விடுவிப்பு குறித்து அவர் இந்திய பிரதமருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில்…

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை

Posted by - August 28, 2017 0
இன்று மற்றும் நாளையும் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை அதிகரிக்கக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் விடுக்கப்பட்டுள்ள…

வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - April 5, 2018 0
வவுனியா, நொச்சிமூட்டை பிரதேசத்தில் 02 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். 54 வயதுடைய ஒருவரே வவுனியா பொலிஸாரால் இன்று அதிகாலை…

ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை

Posted by - June 14, 2018 0
பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 6 மாதத்தில் நிறைவடையும் வகையிலான ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று…

Leave a comment

Your email address will not be published.