நுகேகொட கங்கொடவில நீதிமன்றத்தில் பணியாற்றும் சிரேஷ்ட சட்டத்தரணியொருவர் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
40 கோடி ரூபா பெறுமதியான காணியொன்றுக்கு போலியான காணி உறுதியை அமைத்து, பல நபர்களுக்கு காணி உறுதிகளை எழுதி அரசாங்கத்துக்கு கிடைக்கவிருந்த 4 கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதியை கிடைக்கச் செய்யாமல் போக காரணமாக இருந்த குற்றத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

