அரசாங்கம் இனவாத வன்முறையினால் அரசியல் லாபம் தேடுகிறது – JVP

221 0

நாம் அனைவரும் இந்த இனவாத வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதில் தோல்வியடைந்துள்ளோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (06) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

அம்பாறை மற்றும் தினக அசம்பாவித சம்பவங்கள் தெளிவாகவே அரசியல் நோக்கங்களை அடைந்துகொள்ள முன்னெடுக்கப்பட்டவை என்பது வெளிச்சத்துக் வந்துள்ளன. அரசாங்கம் தமது அதிகாரத்தை கொண்டு செல்வதற்கு அறிந்தும் அறியாமலும் இந்த இனவாதப் பிரச்சினை பரவ இடமளிக்கின்றது.

இனவாத வன்முறைகள் இடம்பெறும் போது கண்டும் காணாதது போன்று அரசாங்கம் பார்வையைத் திருப்பிக் கொள்கின்றது. ஒரு புறத்தில் இந்த சம்பவங்கள் தொடர்பற்றது போன்று அரசாங்கம் இருக்கின்றது. இன்னுமொரு புறத்தில் அரசாங்கத்தில் எழுந்துள்ள நெருக்கடி நிலைமைகளுக்கு ஆசீர்வாதம் போன்றும் இதனை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்கின்றது.

அவசரகால நிலைமையை அரசாங்கம் அமுல்படுத்த தேவையில்லை. அவரச கால நிலைமை வந்ததனால், பிரதமரும், ஜனாதிபதியும் மாறிவிடுவதில்லை. அவர்களுக்குள்ள அதேஅதிகாரம் இருக்கத்தான் செய்கின்றது. இனவாதத்தை கட்டுப்படுத்த அவர்களிடம் உள்ள அதிகாரம் போதுமானது.

அவ்வாறிருக்க ஏன்? அவசரகால நிலைமையை அமுல்படுத்த அரசாங்கம் முன்வந்தது.  ஹம்பாந்தோட்ட துறைமுகத்தையும், மத்தள விமான நிலையத்தையும் விற்பனை செய்யும் போது எதிர்ப்பு வந்தால் அதனை அவசர கால நிலைமையைப் பயன்படுத்தி முறியடிக்கவும், மக்களை கட்டுப்படுத்தவும்தான் இந்த தீர்மானத்துக்கு அரசாங்கம் வந்துள்ளது   எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment