கண்டியின் தற்போதைய நிலை? அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேரில் விஜயம்!!

202 0

கண்டி தெல்தெனிய மற்றும் பல்லேகல பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று மாலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நீடிக்கும் பதற்றத்தை தணிப்பதற்காக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.நேற்று நண்பகலில் இருந்து மெதுவாக ஆரம்பித்த வன்முறைச் சம்பவங்கள் மாலையாகும் போது பலத்த வன்முறையாக மாறியதாகவும் பின்னர் அங்கு பெய்த கடும் மழையையடுத்த ஓரளவு தணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நேற்றிரவு சிறு சிறு கல்வீச்சுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.நேற்று அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று காலை 6 மணியளவில் தளர்த்தப்பட்டு பின்னர் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 10ற்க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களும் 100ற் க்கும் மேற்பட்ட கடைகளும் உடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற பகுதியை அமைச்சர்கள் நேரில் வந்து பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கண்டி மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற கலவரத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் இடம்பெறுவதாக அறிந்த நிலையில், அமைச்சர் ரவூப் ஹக்கீம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment